Monday, February 19, 2007

கழிவான காதல்


உன் சீப்பில் சிக்கிய முடி போல...

உன் கையில் உடைந்த வளையல் போல...

உன் காலில் அறுந்த செருப்பு போல...

நீ சுவைத்து துப்பிய சுவிங்கம் போல...

நீ உடுத்தி கழட்டிய தீட்டுத்துணி போல...

என்னையும் தூக்கி எறிந்து விட்டாயே!

நொந்தவன்: வாழ்க்கை பாரூக்

Monday, February 12, 2007

பொருளாதாரப் புற்றுநோய்

உலகம் வட்டியைத் தின்று கொண்டிருக்கிறது
வட்டியோ உலகத்தை மென்று கொண்டிருக்கிறது

உள்ளுர் வங்கிக்கும், உலக வங்கிக்கும்
ஒரே லட்சியம் ஏழைகளை ஒழிப்பதே...
ஏழ்மையை அல்ல...

கத்தியைக் காட்டிக் கொள்ளையடிப்பவனை
சமூகம் 'சீச்சி' என இகழ்கிறது.
வட்டியின் மூலம் கொள்ளையடிப்பவனை
'சேட்ஜி' எனப்புகழ்கிறது...

மக்களை வருத்தி வட்டியைக் குடிப்பவனே...
எரிமலையினும் கொடியது ஏழையின் கண்ணீர்.

Wednesday, December 20, 2006

தாய்

செத்து பிழைச்சி நம்ம பெத்து எடுப்பா!

இரத்தம் முறிச்சி நித்தம் பால் கொடுப்பா!

தூக்கம் முளிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா!

அல்லும் பகலும் நம்ம அள்ளி வளர்ப்பா!

Monday, September 04, 2006

எனது கவிதை

வளரும் பூச் செடியில்
புதிதாக மலர்ந்த மொட்டு...
பருவம்

சூரிய ஒளி வெப்பத்தில்
சிகப்பு நீர் உப்பு நீரானது....
விவசாயி

அழகிய ரோஜாக் கூட்டத்திற்கு
இடையே மலர்ந்த புதிய மலர்
என்னவள்

நடுப்பகல் சூரிய வெப்பத்தில்
பச்சையிலை கருகியது
உணவில்லா ஏழை

இனமும் இல்லை, மதமும் இல்லை
உறவும் இல்லை, காதலும் இல்லை
நட்பு

புதிதாக பூத்த பூவின் வாசம்
அவள் என்னை கடந்து சென்றால்

மார்கழி மாசத்து பனி துளி
என் உள்ளங்கையில் விழுந்து
அசைந்தாடியது
அவள் பார்த்த முதல் பார்வை

Tuesday, July 18, 2006

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு


தோற்றம்:15.06.1953 மறைவு : 12.07.2006

யுனிகோடு உமர் அவர்களின் மறைவுதேனீ யுனிகோடு எழுத்துருவை தமிழ் உலகத்திற்கு தந்த உமர் அவர்கள் இன்று (12.07.2006) மாலை 5.30 -க்கு இவ்வுலகத்தை விட்டு மறைந்தார்.யுனிகோடுவின் பல்வேறு வகை பயன்பாடுகள் மற்றும் RSS ஓடை பற்றிய கட்டுரைகளோடு இவரின் தமிழ் அகராதியும் பிரபலமானவை. யுனிகோடுவின் வளர்ச்சி பற்றி பேசப்படும் தளங்கள் மற்றும் மடலாற்குழுமங்களில் உமர் அவர்களின் கட்டுரைகளை காணலாம்.அனைத்து தளங்களிலும் பயன்படுத்தும் வகையில் இயங்கு எழுத்துரு (THENEE.eot) தயாரித்து அனைவரின் நேரத்தையும், சிரமத்தையும் குறைத்தவர் உமர் அவர்கள்.உமர் அவர்கள் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 13, 2006

மும்பை குண்டு வெடிப்பு


ஏன் மதம் பிடித்த மனித வெறியடா!
உலகமெனும் மண்ணில் பிறந்து
நாடெனும் மண்ணில் வளர்ந்து
ஊரெனும் மண்ணில் புதைப்படும் மனிதா!
ஏன் இத்தனை வெறி உனக்குல் உன் மனித இன உயிர் குடிக்க?
மனிதநேயமற்ற மனிதனால் மனித உயிர் மதிப்பற்று போயிற்றே!!!

Wednesday, July 12, 2006

எது சிறந்த இனம்

ஆறு அறிவு படைத்த சிறந்த இனம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் மனிதன், உன்மையில் அவனா சிறந்த இனம், எந்த ஒரு இனமும் தன் இனத்தை கொல்கிறதா? இல்லையே, ஆறு அறிவு படைத்த மனித இனம் தான் தன் இனத்தையே கொல்கிறது, மற்ற எல்லா உயிரினங்களையும் ஆட்டிப்படைப்பதாக கூறுகிறானே,
மிருகம் மற்றும் பறவை இனங்கள் சுனாமியை அறிந்து உயிர் பிளைத்தது,
ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதனால் சுனாமி வருவதை அறிய முடிந்ததா?
மனித நேயம் என்ற ஒன்றை மறந்தல்லவா வாழ்கிறான், ஆறு அறிவு என்று சொல்லும் மனித இனமே சிந்தித்துப் பார் நாம் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது கொண்டு செல்வது என்ன! ஒன்றுமில்லை, வாழும் கொஞ்ச நாளில் மனித நேயத்துடன் வாழ்வோம்.